நான் சிரித்தால்’ திரைப்படத்தின் சக்ஸஸ் மீட்டில் சக்காளத்தி சண்ட போட்ட நடிகை குஷ்பூ
இயக்குனர் சுந்தர் சி தயாரிப்பில் இயக்குனர் ராணா இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதியின் நடிப்பில் வெளியான படம் நான் சிரித்தால்.
ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா மேனன், கேஎஸ் ரவிக்குமார், ரவி மரியா, ஷாரா, படவா கோபி, சுஜாதா, பாண்டியராஜன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி 14ல் வெளியானது. இன்று பிப்ரவரி 18ல் இந்த படத்தின் வெற்றி (சக்ஸஸ் மீட்டிங்) சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது.
இதில் படக்குழுவினர் கலந்துக் கொண்டு வெற்றிக்கு காரணமானவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.
இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் குஷ்பூவும் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது…
முதலில் ஹிப் ஹாப் ஆதியை எங்களுக்கு தெரியாது. எனது மகள் அவரின் மிகப்பெரிய ரசிகை. அவள்தான் அந்த வீடியோக்களை காண்பித்தார்.
என் கணவர் (சுந்தர்) யார் அந்த பையன் என கேட்டார்? இவர் தான் ஹிப் ஹாப் ஆதி என அறிமுகம் செய்தார்.
அதன்பின்னர் அவர் எங்கள் படங்களுக்கு இசையமைத்தார். இப்போது எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே ஆகிவிட்டார்.
ஹிப் ஹாப் ஆதி எப்போது எங்கள் வீட்டிற்கு வந்தாலும் மணிக்கணக்கில் எனது கணவருடன் பேசிக் கொண்டே இருப்பார்.
இரவு வெகு நேரம் ஆனாலும் பேசிக் கொண்டே இருப்பார்கள். எனக்கு வந்த சக்காளத்தி ஆதி.
அவர்கள் இரவு நேரத்தில் தான் அதிகம் உழைக்கிறார்கள். அது அவர்களுடைய பாணி. நமக்கு காலை நேர உழைப்பு தான்.”
என பேசினார் குஷ்பு.











