சூர்யா தனுஷ் & சிவகார்த்திகேயன் வழியில் விஜய் தேவரகொண்டா

அர்ஜுன் ரெட்டி மற்றும் கீதா கோவிந்தம் ஆகியவை தெலுங்கு படங்களாக இருந்தாலும் அதன் வெற்றியால் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா.

எனவே இவரது சமீபத்திய படங்கள் நோட்டா, டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்கள் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

தற்போது இவரும் படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு உள்ளர்.

கிங் ஆப் தி ஹில் என்ற நிறுவனத்தை தொடங்கி மீக்கு மாத்திரமே சொப்தா என்ற படத்தை தயாரிக்கிறார்.

இவரது பெல்லி சூப்புலு என்ற படத்தை இயக்கிய தருண் என்பவரை தனது முதல் தயாரிப்பில் நாயகனாக்கி அழகு பார்க்கிறார்.

ஷாமிர் சுல்தான் என்பவர் படத்தை இயக்கவுள்ளார்.

தமிழில் சினிமாவின் இளம் நாயகர்களான சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் மற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!