தலைநகரம் இரண்டாம் பாகத்தில் இனையும் வைகைப்புயல் வடிவேலு – இயக்குனர் சுந்தர் சி.
தலைநகரம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் இயக்குனர் சுந்தர் சி – வைகைப்புயல் வடிவேலு கூட்டணி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முறை மாமன் உள்ளத்தை அள்ளித்தா’, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் சுந்தர்.சி.
இவர், ‘தலைநகரம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இந்த திரைப்படம் ரசிகர்களிடம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த தலைநகரம் திரைப்படத்திற்கு காமெடி காட்சிகள் அனைத்துமே இயக்குநர் சுராஜ் எழுதினார்.
இப்படத்தில் இடம்பெறும் வைகைப்புயல் வடிவேலுவின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், தலைநகரம் திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்திலும் சுந்தர் சி கதாநாயகனாக நடிப்பார் என கூறப்படுகிறது.
இந்த தலைநகரம் 2 திரைப்படத்தை இயக்குனர் வி.இசட்.துரை இயக்க உள்ளார்.
இவர் தற்போது அமீரின் நாற்காலி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கு முடிந்த பின் தலைநகரம் 2-ம் பாகத்தை இயக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்த திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலுவை நடிக்க வைக்க முயற்சி நடந்தது வருகிறது.
இயக்குனர் சுந்தர் சி-யின் இருட்டு திரைபடத்தை வி.இசட்.துரை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஏற்கனவே அஜித்குமார் நடிக்க வைத்து ‘முகவரி’, சிம்புவின் ‘தொட்டி ஜெயா’, பரத்தின் ‘நேபாளி’, ஷாமின் ‘6 மெழுகுவர்த்திகள்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.











