தளபதி நடிகர் விஜய் நடித்துள்ள “மாஸ்டர்” திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய சன் டிவி…!

தளபதி நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது.

தளபதி நடிகர் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கும் இப்பாடல்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

ஆடியோ லான்சிற்கு பிறகு திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் டீஸருக்காக வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்களை கொரோனா வைரஸ் வந்து ஆப் பண்ணிவிட்டது.

இதையடுத்து திரைப்படத்தின் வெளியீட்டு தேதியும் தள்ளி சென்று தளபதி நடிகர் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி மாஸ்டர் வெளியாகும் என நம்பகுந்த வட்டாரத்தில் செய்திகள் வெளிவந்தது.

கொரோன வைரஸ் நோய் தொற்று பரவலை காரணமாக லாக்டவுனிலும் திரைப்படத்தின் வேலை உள்ளிருந்தபடியே மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ரூபாய். 20 கோடி கொடுத்து சன் டி.வி வாங்கிவிட்டதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேயார் கூறியுள்ளார்.

மேலும் `மாஸ்டர்’ திரைப்படத்தின் ஓவர்சீஸ் உரிமையை 30 கோடிக்கு விற்று விட்டனர் என தகவல் வெளிவந்துள்ளது.

இதே போல் கடைசியாக தளபதி நடிகர் விஜய் நடித்து வெளிவந்த பிகில் திரைப்படமும் 30 கோடிக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!