நடிகர் சத்யராஜ் மகள் டாக்டர் திவ்யா சத்யராஜின் புதிய இயக்கம் விரைவில்‌ ஆரம்பிக்க உள்ளேன்‌.

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர்‌ என்பது நாம் அறிந்த விஷயம்தான்.

இவர் உலகின்‌ மிக பெரிய மதிய உணவுத்‌ திட்டமான அக்ஷய பாத்ராவின்‌ விளம்பரத்‌ தூதுவராக இருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பு மருத்துவ துறையில்‌ நடக்கும்‌ முறைக்கேடுகளை பற்றியும்‌ நீட் தேர்வை எதிர்த்தும்‌ திவ்யா சத்யராஜ் பிரதமருக்கு எழுதிய கடிதம்‌ சமூக வலைத்தளங்களில்‌ வைரலானது.

அரசு மருத்துவமனைக்கு வரும்‌ கர்பிணிப்‌ பெண்களுக்கு உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை போக்க வேண்டும்‌ என்று சுகாதார அமைச்சரிடம்‌ கோரிக்கையும் விடுத்திருந்தார்‌.

தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் பெரும்‌ இழப்புகளை சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்‌ என்று திவ்யா சத்யராஜ் சமீபத்தில்‌ விவசாய அமைச்சரிடம்‌ கேட்டுக்‌ கொண்டார்‌.

திவ்யா சத்யராஜ்‌ ஊட்டச்சத்து துறையில்‌ செய்த சேவைகளை அங்கீகரித்து அமெரிக்காவின்‌ சர்வதேச தமிழ்‌ பல்கலைக்கழகம்‌ அவருக்கு டாக்டா்‌ பட்டம்‌ வழங்கியுள்ளது. டாக்டா்‌ பட்டம்‌ பெற்றவர்களை கெளரவிக்க அமெரிக்காவில்‌ நடைபெறவிருந்த விழா கோவிட்‌ 19 காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க சர்வதேச தமிழ்‌ பல்கலைக்கழகத்தின்‌ டாக்டர்‌ பட்டம்‌ பெறுவது எனக்கு மிகவும்‌ மகிழ்ச்சியாக இருக்கிறது.

அமெரிக்க சர்வதேச பல்கலைக்கழகத்தின்‌ நிறுவனர்‌ டாக்டர்‌ செல்வின்‌ குமார்‌ அவர்களுக்கு என்‌ நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்‌.

நான்‌ புத்திசாலி மாணவி கிடையாது.

ஆனால்‌ நான் கடின உழைப்பாளி.

அறிவாளியாக இருப்பதைவிட கடின உழைப்பாளியாக இருப்பதுதான்‌ சிறந்தது என்று எனது அப்பா சொல்லியிருக்கிறார்‌.

ஆரோக்கியமான வாழ்க்கை வசதி உள்ளவர்களுக்கு தான்‌ என்பது நியாயம்‌ கிடையாது.

தமிழ்‌ நாட்டில்‌ குறைந்த வருமானத்தில்‌ வாழ்பவர்களின்‌ ஆரோக்கியத்தை மேம்படுத்த விரைவில்‌ ஒரு இயக்கம்‌ ஆரம்பிக்க உள்ளேன்‌” என்று திவ்யா சத்யராஜ் கூறுகிறார்.

error: Content is protected !!