நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 64′ திரைப்படத்தின் தலைப்பு தெரியுமா ⁉*

”பிகில்’ படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் தனது 64-வது படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்திற்கு ‘டாக்டர்’ என தலைப்பிடப்பட்டுள்ளதாகவும், மருத்துவத்துறையில் நடக்கும் ஊழல்கள், நீட் பிரச்னை உள்ளிட்டவற்றை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!