நடிகர் விஜய் நடிப்பில் பிகில் டிக்கெட் பணத்தை திருப்பி கொடுங்க..; தியேட்டர்களுக்கு – அமைச்சர் கடம்பூர் ராஜு ஆர்டர்

தீபாவளிக்கு நடிகர் தளபதி விஜய் நடிப்பில் பிகில் மற்றும் கார்த்தி நடிக்கும் கைதி என இரு திரைப்படங்கள் வெளியாகிறது.

பெரிய நடிகர்கள் படம் என்பதால் அதிகாலை சிறப்பு காட்சிகள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்க முடியாது. அதை மீறி திரையிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஏற்கனவே கூறியிருந்தார்

ஆனாலும், சில திரையரங்குகள் விஜயின் பிகில் திரைப்படத்தின் காலை காட்சிக்கான டிக்கெட்டுகளை விற்று வருகின்றனர்.

அந்த டிக்கெட்டுகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ….

‘ தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளில் விடுமுறையை பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நல்லண்ணெத்தில் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், இதை தவறாக பயன்படுத்தி திரையரங்க உரிமையாளர்கள் அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்ததால் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை.

எனவே, தீபாவளி சிறப்பு காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளை ரத்து செய்து அதற்கான பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும்.

பிகில் மட்டுமல்ல.. எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை’ என அவர் கூறினார்.

error: Content is protected !!