நடிகை மீரா மிதுனுக்கு பதிலாக டாக்டர் ஏ.முகமது ஹக்கீம் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனரானார்!
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மீரா மிதுன். இந்தநிலையில் யாரும் எதிர்பாராத விதமாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனராக நியமிக்கப்பட்டார் மீரா மிதுன்.
இது தொடர்பாக ஊழல் தடுப்பு ஆணையம் தனக்கு வழங்கிய அடையாள அட்டையையும் அது குறித்த அதிகாரப்பூர்வமான கடிதத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து ஊழலை ஒழிக்கப் போவதாக சபதம் எடுத்த மீரா மிதுன், “ஊழல் செய்பவர்கள் யாராலும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. நான் உங்களை எந்நேரமும் கவனித்துக் கொண்டே இருப்பேன்” என பேசிவந்தார்.
இந்த நிலையில் மீரா மிதுனிடம் இருந்து அந்த பதவியை பறித்து அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்.. அவருக்கு பதிலாக திருச்சியைச் சேர்ந்த பிரபலமான டாக்டர் ஏ.முகமது ஹக்கீம் என்பவர் தற்போது அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
மீரா மிதுன் தன் தன்னை பற்றிய போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழை சமர்ப்பிக்காததால்தான் இந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது..
அதுமட்டுமல்ல மீரா மிதுன் வகித்துவந்த ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனர் பதவிக்கு என எந்த அதிகாரமும் கிடையாது.. அரசு அதிகாரிகள் யாராவது லஞ்சம் கேட்டால் அது குறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் அளிக்கும் உரிமை மட்டுமே இருக்கிறது தற்போது அந்தப் பதவியும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாஸ்டர் பட போஸ்டர் என்னை பார்த்து காப்பி அடித்திருக்கிறார்கள் – நடிகை மீரா மிதுன்.
நடிகை மீரா மிதுனை ஏதோ ஒரு நாய் குறைக்குதாமே அதாவது தெரு நாய் என கிண்டலாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கைதி திரைப்பட நடிகர் தீனா.
நடிகர் சூர்யாவிற்கு நடிக்கவும் தெரியாது ஆக்டிங் என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது என கலாய்த்துள்ளார் நடிகை மீரா மிதுன்.
எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் அன்பான அட்வைஸ் நடிகர் சூர்யா மீரா மிதுனுக்கு மறைமுக பதிலடி.
தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக்பாக்சிங் சங்கத்திற்கும் (பதிவு எண் L-30-31523) வழங்கப்பட்டது என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.!!
ஊடகத் துறையினருக்கு மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குனர் நடிகர் இரா . பார்த்திபன்.
” பேய காணோம் ” படப்பிடிப்பில் இருந்து நள்ளிரவில் ஆறு பேர் கொண்ட கும்பலுடன் ஓடிய நடிகை மீரா மிதுன் படக்குழுவினர் அதிர்ச்சி.
அஜித்குமார் கூட ஏற்கனவே நடித்து இருக்கிறார் அஜித்குமார் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை மீரா மிதுன்.
சிறு குறு நடுத்தர தொழில்களைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக உதவ வேண்டும். – மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் அறிக்கை.
தமிழ்நாடு மாநில கிக் பாக்ஸிங் பயிற்சி முகாம் மற்றும் நடுவர் கருத்தரங்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

