எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் அன்பான அட்வைஸ் நடிகர் சூர்யா மீரா மிதுனுக்கு மறைமுக பதிலடி.
கடந்த சில நாட்களாகவே தமிழ் திரைப்பட உலகில் உள்ள பல நடிகர் நடிகைகள் கடுமையாக கேவலமாக விமர்சித்து வருகிறார் நடிகை மீரா மிதுன்.
நடிகர் சூர்யாவுக்கு ஆக்டிங் என்றால் என்னவென்றே தெரியாது. அவருக்கு நடிக்கவே தெரியாது என வசைபாடி இருந்தார்.
இதனால் தளபதி நடிகர் விஜய் நடிகர் சூர்யா இவர்களுடைய ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டி வருகின்றனர்.
இதனையடுத்து நேற்று நடிகை மீரா மிதுனுக்கு தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள்.
மேலும் இதனை கண்டுக் கொள்ளாத தென்னிந்திய நடிகர் சங்கத்தையும் கண்டித்து இருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பாக நடிகர் சூர்யா தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
நடிகர் சூர்யா ட்விட்டர் பதிவில்…
எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்..
இத்துடன் கடந்த 2018 ஜனவரி மாதம் 20ஆம் தேதி அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவையும் பகிர்ந்துள்ளார்.
தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற #AnbaanaFans
எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்.. https://t.co/qR32iviTfO
— Suriya Sivakumar (@Suriya_offl) August 11, 2020
https://twitter.com/Suriya_offl/status/954581275720888320?s=19











