நரகாசூரன் திரைப்படம் குறித்து அப்டேட் செய்த இயக்குனர்.

நடிகர் ரகுமான் நடிப்பில் ‘துருவங்கள் 16’ திரைப்படத்தை இயக்கி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் இயக்குனர் கார்த்திக் நரேன்.

அதன் பின்னர் நடிகர் அரவிந்த்சாமி மற்றும் நடிகை ஸ்ரேயா நடிப்பில் ‘நரகாசூரன்’ திரைப்படத்தை இயக்கினார்.

இந்த திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் தயாரித்திருந்தார்.

ஆனால் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் இந்த திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.

அண்மையில் நடிகர் அருண் விஜய், பிரசன்னா நடித்த ‘மாஃபியா: சேப்டர் 1’ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

அந்த திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் நரகாசூரன் திரைப்படம் ரிலீஸ் குறித்து அப்டேட் செய்துள்ளார் கார்த்திக் நரேன்.

கிரிஸ்டோபர் நோலனின் ‘டெனெட்’ பட டிரெய்லரிலிருந்து ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்துள்ளார்.

அதில் “நரகாசூரன்’ வெளிவரும் ஆனால்…..இந்தப் பகுதி சற்று நாடகத்தன்மையாக இருக்கும்” என்ற டயலாக்கை இணைத்துள்ளார்.

அதாவது ‘நரகாசூரன்’ திரைப்படத்தை நேரடியாக OTT யில் ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

error: Content is protected !!