நான் வச்ச அரசியல் புள்ளி மிக பெரிய சுனாமியாக மாறும் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சாணக்யா’ என்ற யூடிப் சேனலின் முதலாம் ஆண்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா, சென்னையில் நடைபெற்றது.

அதில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது…

அரசியலில் அலை முக்கியம். அதனால் தான், அலை உண்டாக வேண்டும்; இயக்கம் உருவாக வேண்டும் என்றேன்.

உடனே, ‘இவர் வர மாட்டாரா’ என, கேட்கின்றனர். எனவே ஒரு விஷயத்தை சொல்ல நினைக்கிறேன்.

சினிமாவில் இருந்து வந்த, எம்.ஜி.ஆர்., முதல்வரானார். அவர், 25 ஆண்டுகள், தி.மு.க.,வில் இருந்தார்; ரொம்ப நல்லவர்; நிறைய உதவிகள் செய்துள்ளார். கருணாநிதி முதல்வராக, அவரும் மிகப்பெரிய காரணம் இருந்தார்.

திமுக.வில் பொருளாளராக இருந்த அவர், கணக்கு கேட்டதற்காக, கட்சியில் இருந்து நீக்கினார்கள்.

அவராக வெளியே சென்றிருந்தால் அது சரியாக இருந்திருக்காது. அவரை வெளியேற்றிய பின்னர் ‘என்ன தவறு செய்தேன்; கணக்கு கேட்டது தப்பா’ என, கேட்டார். அனுதாப அலை வீசியது. முதல் முறையாக, தேர்தலில் வெற்றி பெற்றார்.

அடுத்து, 1991ல், காங்கிரஸ் கட்சியோடு, ஜெ., கூட்டணி வைத்தார். ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால் தி.மு.க.,விற்கு எதிரான அலை வீசியது. முதன் முறையாக, ஜெ.,
ஜெயலலிதா வெற்றி பெற்றார்.

error: Content is protected !!