மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்திய இடத்தில் மரக்கன்றுகள் நட்டுவைத்த ‘மாஸ்டர்’ படக்குழுவினர்.!
இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர்.
இப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.
இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்க. சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பினை பிலோமின் ராஜ் கவனித்து வருகிறார்.
கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார் .
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு , அர்ஜுன் தாஸ் , அழகன் பெருமாள், ரம்யா சுப்ரமணியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் .
சமீபத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
படப்பிடிப்பை முடித்தபின் தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நெய்வேலியில் கடைசி நாள் படப்பிடிப்பில் மரக்கன்றுகளை படப்பிடிப்பு தளத்தில் நட்டுள்ளனர்.
இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.











