ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் சூரி, அம்மன் என்கிற உணவகத்தை மதுரையில் 2017-ல் தொடங்கினார். அந்த உணவகத்துக்கு மக்கள் அளித்த வரவேற்பினால் உற்சாகமாகி மதுரையிலேயே பல கிளைகளை தொடங்கியுள்ளார். மதுரை அவனியாபுரம் ஏர்போர்ட் பைபாஸ் சாலையில் அம்மன் – சைவ உணவகம், அய்யன் – அசைவ உணவகம் என இரு கிளைகளை தற்போது மேலும் தொடங்கியுள்ளார்.

இந்த இரு கிளைகளையும் சூரியின் நெருங்கிய நண்பரும் பிரபல நடிகருமான சிவகார்த்திகேயன் சமீபத்தில் திறந்து வைத்தார். இந்த உணவகத்தின் சுவை மக்களின் மனதை கவர்ந்துவிடவே, நடிகர் சூரியின் வியாபாரம் சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில், இந்த உணவகத்துக்கு திடீர் என்று நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி திடீரென வருகை தந்துள்ளார்.

உணவகத்துக்கு சாப்பிட வந்த ரசிகர்கள் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை சூழந்து செல்பி எடுக்க விருப்பம் தெரிவித்தனர். அவர்களின் போனை வாங்கி அவர்களுடன் செல்பி எடுத்து கொடுத்தார். ஒரு ரசிகர் தன் உறவினருடன் வீடியோ காலில் பேசுங்கள் என்று ஆசையாக கேட்கவே, அவரின் ஆசையையும் நிறைவேற்றினார். நடிகர் சூரிக்கு தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, இரவு உணவையும் அங்கேயே சாப்பிட்டு விட்டு சென்றார்

error: Content is protected !!