விஷ்வ-குருவாக மாறுவோம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கை அமல்படுத்தி மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் கொரோனாவுக்கு பிறகு இந்தியாவை புனரமைத்தல் எப்படி என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்… சுகாதாரத்துறையே புதிய பாதுகாப்புத்துறை, உழவுக்கு வந்தனை செய்வோம்.

இப்போதாவது, அமைப்பு சாரா தொழிலாளர்களை முறைப்படுத்துங்கள், வருமான சமத்துவமின்மையை சீர்செய்தல் மற்றும் வறுமை ஒழிப்பு என்ற தலைப்புகளில் பல திட்டங்கள், கோரிக்கைகளை பற்றி தெரிவித்துள்ளார்.

மேலும் , வல்லரசு என்ற இந்தியாவின் பல்லாண்டுக் கனவை, தூசி தட்டி எடுத்து, அதை நோக்கி பயணிக்கும் நேரம் இது. உலக நாடுகள் அனைத்துக்கும் முன் மாதிரியாக, நம்பிக்கையின் முன்னோடியாக சிலருக்கு புரியும்படி சொல்வதென்றால் சரியான காரணங்களுக்காக விஷ்வ-குருவாக மாறுவோம்..

என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்..

error: Content is protected !!