அஜித்குமார் ஒரு சூப்பர் ஸ்டார் – நடிகை த்ரிஷா பாராட்டு

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில், நடிகை த்ரிஷா கலந்து கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடினர். அப்போது பேசுகையில், பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான சட்டத்தை கொண்டு தண்டிக்க வேண்டும் என்றும், பெண்கள் தன்னம்பிக்கையுடன் தங்கள் லட்சியத்திற்காக போரடினால் நிச்சயம் வெற்றி பெற முடியும் கூறினார். மேலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அஜித்குமார் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றும், அவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்றும் கூறினார். மேலும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித்குமார் நடித்தது மிகவும் பாராட்டுக்குரியது என்றும் கூறினார்.