Tuesday, October 20
Shadow

அடுத்த பிரம்மாண்டம்…. பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

இயக்குநர் ராதா கிருஷ்ணா இயக்கத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்து வந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பாகுபலி’ திரைப்படங்கள் மூலம் தேசிய அளவு கவனம் பெற்றவர் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ‘சாஹோ’வில் நடித்தார்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான ‘சாஹோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

தற்போது தெலுங்கு நடிகர் பிரபாஸ், ‘சாஹோ’ திரைப்படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரிக்கும்  திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதிக பட்ஜெட்டில் தமிழ் தெலுங்கு இந்தி மலையாளம் என மூன்று மொழிகளில் இந்த திரைப்படம் தயாராகவுள்ளது.

மேலும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடவும் இருக்கிறார்கள்.

ஜில் திரைப்படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராதா கிருஷ்ணா இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.

இந்த திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸுக்கு கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

இந்த நிலையில் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த திரைப்படத்திற்கு “ராதே ஷ்யாம்” என பெயரிட்டுள்ளனர்.

இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.