இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் ரசிகர்கள் எடுத்த சபதம்!

இயக்குநர் சிகரம் கே. பாலசந்திரன் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுவதாக சபதம் எடுத்துள்ளனர் அவருடைய ரசிகர்கள்.இயக்குநர் சிகரம் அவர்களின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு,90 மரக் கன்றுகளை நடுவதற்கு, இயக்குநர் சிகரம் அவர்களின் புதல்வி திருமதி.புஷ்பா கந்தசாமி அவர்களும், மருமகன் திரு.கந்தசாமி அவர்களும், முதல் இரு மரக்கன்றுகளையும், நன்கொடையாக  பத்தாயிரம் (10,000/-)ரூபாயும், கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க பொதுச் செயலாளர் கவிதாலயா வீ.பாபு அவர்களிடம் கொடுத்தார்கள்.

இதை தொடர்ந்து கலைமாமணி நடிகை குமாரி சச்சு, நடிகை திருமதி.ரேணுகாகுமரன், நடிகர்கள் திரு.ராஜேஷ், திரு.பூவிலங்குமோகன், திரு.ரகுமான்,
திரு.ராம்ஜி,
திரு.குமரன்,
நடிகரும் கராத்தே மாஸ்டருமான திரு.சிஹான் உசேன் HU,
இயக்குநர் நடிகர் தயாரிப்பாளருமான திரு.T.P.கஜேந்திரன்,
நடிகரும் இயக்குநருமான திரு.ரமேஷ்கண்ணா,
கவிஞர் இயக்குநர் திரு.கண்மணி சுப்பு,
இயக்குநர் திரு.நாகா,
தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தலைவர் திரு.தளபதி,
பொதுச் செயலாளர் திரு.C.ரெங்கநாதன்,
இணைச் செயலாளர் திரு.T.R.விஐயன், கே.பி.அவர்களின் வண்டி ஓட்டுனர், திரு.கோவிந்தசாமி,
திரு.ராஜேந்திரன் ஆகியோர்,முதல் பகுதியாக கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க நிர்வாகிகளிடம் மரக்கன்றுகளை
வழங்கினார்கள்.

தொடர்ந்து, கே.பி.90-மரம் நடும் சபதம் என்கிற தலைப்பில் இந்த வருடம் முழுவதும் கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க நிர்வாகிகள் தலைமையில் மரக்கன்றுகள் நடப்படும் என்று தெரிவித்துள்ளனர் அவருடைய ரசிகர்கள்.