பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி திரைப்படத்தில் இருந்து திடீரென வெளியேறிய நடிகை திரிஷா
சிரஞ்சீவி நடித்த ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தை அடுத்து அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ’ஆச்சார்யா’.
பிரபல இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கி வரும் இந்தப் படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிப்பதாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென இந்த படத்திலிருந்து திரிஷா விலகி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தின் தன்னுடைய கேரக்டரை கூறியபடி படமாக்கப்படவில்லை என்பதால் இந்த திரைப்படத்தில் இருந்து விலகி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி திரைப்படத்திலிருந்துதான் வருத்தத்துடன் விலகுவதாகவும் இருப்பினும் தெலுங்கு ஆடியன்ஸ்களை மிக விரைவில் ஒரு நல்ல திரைப்படத்தில் சந்திக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆச்சார்யா திரைப்படத்திலிருந்து திரிஷா விலகியதை அடுத்து இந்த திரைப்படத்தை வேறு ஒரு முன்னணி நடிகையிடம் படக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
ஏற்கனவே நடிகை திரிஷா, ‘சாமி 2’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அதன் பின்னர் தன்னுடைய கேரக்டர் டம்மி செய்யப்பட்டதால் அந்த திரைப்படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது











