அந்தாதுன் தமிழ் ரீமேக்..: நடிகர் பிரசாந்தை இயக்கும் கௌதம் வாசுதேவ் மேனன்

ஆயுஷ்மன் குரானா, தபு உள்ளிட்டோர் நடித்த ஹிந்தி படம் ‘அந்தாதுன்’.

ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இப்படம் 32 கோடி பட்ஜெட்டில் உருவாகி 450 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்த படம் ‘தி பியானோ டியூனர்’ என்ற பிரெஞ்சு படத்தின் தழுவல் என கூறப்படுகிறது.

சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளையும் இப்படம் வென்றது.

சில நாட்களுக்கு முன் இப்படத்தின் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்க உள்ளதாக தியாகராஜன் அறிவித்திருந்தார்.

தற்போது இப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ளார் என தகவல்கள் வந்துள்ளன.

error: Content is protected !!