அந்தாதூன்’ தமிழ் ரீமேக்: தபு கதாபாத்திரத்தில் ஆச்சரியப்படுத்தவுள்ள நடிகை சிம்ரன்.
ஒரு பெரிய எதிர்பார்ப்பு சமீபத்தில் ஒரு படத்துக்கு உருவாகியுள்ளது என்றால் அது ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக்கிற்குத் தான்.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்திப் படம் ‘அந்தாதூன்’. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றதுடன் 3 தேசிய விருதுகளையும் வென்றது.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை கடும் போட்டிக்கு இடையே தியாகராஜன் கைப்பற்றினார். பொன்மகள் வந்தாள்’ படத்தின் மூலம் அனைவருடைய பாராட்டையும் பெற்ற இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார். இதில் நாயகனாக பிரசாந்த் நடிக்கவுள்ளார். இதற்காக உடல் இழைத்து தயாராகி வருகிறார்.
தற்போது முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ‘அந்தாதூன்’ படத்தில் தபுவின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. தமிழ் ரீமேக்கில் அந்தக் கதாபாத்திரத்தில் தனது நடிப்பு, நடனம் என அனைத்து வகையிலும் ஆட்கொண்ட சிம்ரன், நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், கண்டிப்பாக இவருடைய நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்.
அந்தாதூன்’ ரீமேக்கில் தபு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறித்து சிம்ரன் “இந்திய சினிமாவில் ஒரு மைல்கல் திரைப்படம் ‘அந்தாதூன்’. பல்வேறு பகுதி மக்களைச் சென்று சேர்ந்தது. தபு அவர்களின் கதாபாத்திரத்தில் நடிப்பது மிகப்பெரிய பொறுப்பு. துணிச்சலான, அதே நேரம் சவாலான கதாபாத்திரம். இந்தப் படத்தில் மீண்டும் பிரசாந்துடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சமீபத்தில் நான் பார்த்த படங்களில் பொன்மகள் வந்தாள் மிகவும் அர்புதமாக இருந்தது. அந்தப் படத்தின் இயக்குனர் ப்ரெட்ரிக் உடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாயிருக்கிறேன்.
இதர கதாபாத்திரங்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. காமெடி, த்ரில்லர் என அனைத்தும் கலந்த வித்தியாசமான படமான ‘அந்தாதூன்’ தமிழிலும் மாபெரும் வெற்றியடையும் என்பதில் சந்தேகமில்லை.
Related posts:
அந்தாதூன் தமிழ் ரீமேக் நடிகர் பிரசாந்த்தை இயக்கும் ஜே.ஜே.பிரட்ரிக் – பிரம்மாண்டமாக தயாராகிறது!
22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த நடிகை சிம்ரன், நடிகை லைலா கூட்டணி !
அக்னிச் சிறகுகள்’ திரைப்படத்தில் நடிகை அக்சரா ஹாசனின் கதாபாத்திரம் குறித்த தகவல் *
சூப்பர் ஸ்டாரின் ‘தர்பார்’ திரைப்படத்தின் அட்டகாசமான அப்டேட்
தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை : நடிகை ரியா*
இயக்குநர் அஜய் பூபதியின் ‘செவ்வாய்கிழமை’ படத்தில் ‘ஷைலஜா’ கதாபாத்திரத்தில் நாயகி பாயல் ராஜ்புத் நடிக்கிறார்!!
தமிழில் ரீமேக் ஆகிறது ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’: கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் எல்லாமே ஸ்பெஷல்தான் – பிசாசு பட நடிகை பிரயாகா மார்ட்டின்
நடிகை தமன்னாவின் தொழில் பக்தி பாராட்டுக்குரியது – சிரஞ்சீவி
திரையரங்குகள் உரிமையாளர்களை எதிர்ப்பையும் மீறி நடிகை ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் OTT தளத்தில் நாளை வெளியீடு.



