அமலாபால் நடித்த ‘ஆடை’ படத்தின் சென்சார் குறித்த தகவல்
நடிகை அமலாபால் கடந்த ஆண்டு நடித்த ‘ராட்சசன்’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது அவர் ‘அதோ அந்த பறவை போல’, ‘ஆடை’, மற்றும் 3 மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அமலாபால் நடித்த ‘ஆடை’ படத்தை தணிக்கை செய்த தணிக்கை குழுவினர் படத்திற்கு “ஏ” சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனையடுத்து இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் ரத்னகுமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பிரதீப்குமார் இசையமைத்துள்ளார்.