மகாமுனி’ படத்தின் சென்சார் மற்றும் திரையிடும் தேதி குறித்த தகவல்
ஆர்யா நடிப்பில் தற்போது 5 திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அவற்றில் ‘காப்பான்’ திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 20ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் ஆர்யா நடித்துள்ள ‘மகாமுனி’ திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 6ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த படதிற்கு தணிக்கை குழுவினர் “யு/ஏ” சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.











