அயோக்கியா – திரை விமர்சனம்
நடிப்பு – விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார். எம்.எஸ்.பாஸ்கர், பூஜா தேவரியா, சோனியா அகர்வால், ஆனந்த்ராஜ் மற்றும் பலர்
தயாரிப்பு – லைட் அவுஸ் மூவி மேக்கர்ஸ்
இயக்கம் – வெங்கட் மோகன்
இசை – சாம் சி.எஸ்
வெளியான தேதி – 11 மே 2019 ரேட்டிங் – 3/5
அயோக்கியன் என பெயர் வைத்தால் ஒருமாதிரியாக இருக்கும், ஒரு டப்பிங் படத்திற்கான எபெக்ட் இருக்கும் என்பதற்காக அயோக்யா என வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. தெலுங்கு டெம்பர் ரீமேக்தான் இந்த அயோக்யா என்றாலும் அப்படியே ஒரு தெலுங்கு படத்தைப் பார்த்த எபெக்ட்தான் இருக்கிறது.
தெலுங்கிலிருந்து இப்படி நான்கு படங்களை ரீமேக் செய்தால் போதும் வரும் ஒன்றிரண்டு நல்ல படங்கள் கூட காணாமல் போய்விடும். அப்படி ஒரு கரம் மசாலா படம் இது. தெலுங்கு படத்தின் கிளைமாக்சை மட்டும் மாற்றிவிட்டு, தனக்கு ஒரு இமேஜ் வருவது போல மாற்றுங்கள் என விஷால் சொல்லியிருப்பாரோ, என்னவோ, நம்பவே முடியாத ஒரு கிளைமாக்சை வைத்து சினிமாத்தனத்தின் உச்சமாக படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் மோகன்.
தாய், தந்தையை இழந்த ஒரு அனாதைபோல் வாழ்ந்து வருகிறார் விஷால் தனது சிறுவயதில் ஆனந்த
ராஜ் சொல்லைக் கேட்டு சிறிய அளவில் திருடி வருகிறார். ஒருமுறை திருட்டு வழக்கில் சிக்கும் சிறு வயது விஷாலை,
வந்து மீட்டுச் செல்கிறார். அதுவரை ஆனந்த்ராஜ்தான் பெரிய தாதா என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருந்த சிறு வயது விஷால், காவல் நிலையத்திற்கு சென்று வந்த பிறகு
ஆனந்த்ராஜ்யிடம் சிறு வயது விஷால் கேள்விகள் பல கேட்கிறான்
போலீஸாக இருந்தால் யாரும் கேள்வி கேட்க முடியாது
நிறைய பணம் கிடைக்கும் என்று என்று ஆனந்த்ராஜ்
பதில் சொல்ல
போலீசாக வேண்டும் என்று வெறியுடன் திரிகிறான் நீ படித்தால் மட்டுமே போலீஸ் அதிகாரியாக ஆக முடியும் என்று ஆனந்தராஜ் சொல்ல படிப்பில் கவனம் செலுத்துகிறான்
பின்னர் ஆனந்த்ராஜிடம் இருந்து விலகி, படிப்பில் கவனம் செலுத்துகிறாரன்
10-வது வரை படித்து பின்னர், சில மேல் படிப்புகளில் தில்லுமுல்லு
செய்து போலீசாகி விடுகிறார். சென்னையில் தாதாவாக இருக்கும் பார்த்திபன், தனது நாலு தம்பிகளை வைத்து கடத்தல் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் இடைஞ்சல் கொடுக்க , பிரச்சனை இல்லாத போலீஸ் அதிகாரி ஒருவரை அனுப்பும்படி பார்த்திபன், மந்திரியான சந்தானபாரதியிடம் சொல்கிறார்.
இதையடுத்து அந்த பகுதிக்கு போலீஸ் அதிகாரியாக விஷால் வருகிறார். விஷால், பார்த்திபன் செய்யும் தவறுகளை கண்டுகொள்ளாமல், அவர்களிடம் பணம் வாங்கி கொண்டு நலுவுகிறார். இது நேர்மையாக வாழும் போலீஸ் அதிகாரியான கே.எஸ்.ரவிக்குமாருக்கு விஷால் செய்வது எதுவும் பிடிக்கவில்லை. இதனாலேயே அவர் விஷாலுக்கு மரியாதை கொடுக்க மறுக்கிறார்.
பார்த்திபன் கொடுத்த ஒரு பங்களாவில் தங்கி வரும் விஷாலுக்கு, அவர் வீட்டிற்கு அருகே தங்கியிருக்கும் ராஷி கண்ணாவுடன் நாய் பூனை பச்சை கிளி வளர்த்துவருகிறார் ஒருநாள் இருக்கும் வீட்டில் உள்ள அனைத்து நாய்களும காணாமல் போக நமது கதாநாயகன் விஷால் அவர்களுக்கு கண்டுபிடித்து தருகிறார் அவர்கள் இருவரும் காதல் ஏற்படுகிறது. இந்த நிலையில், பூஜா தேவரியா தனது தங்கையை பலாத்காரம் செய்து கொலை செய்த பார்த்திபனின் தம்பிகளுக்கு நால்வருக்கும் தண்டனை வாங்கிக் கொடுக்க நினைக்கிறார். இதனால் அவரை கடத்தி கொலை செய்ய நினைக்கின்றனர். பூஜா தேவரியாவுக்கு பதில் ராஷி கண்ணாவை பார்த்திபனின் ஆட்கள் கடத்தி செல்கின்றனர்.
ராஷி கண்ணாவை விஷால் காப்பாற்றுகிறார். பின்னர் பார்த்திபனுக்கும், விஷாலுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.
கடைசியில், விஷால் தனது போக்கை மாற்றிக் கொண்டு திருந்தினாரா? பார்த்திபனின் தம்பிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
விஷால் படம் முழுக்க காக்கிச்சட்டை அணியாத போலீஸ் அதிகாரியாகவே வலம் வருகிறார். முதல் பாதி முழுவதும் அயோக்யத்தனம் செய்து கொண்ட இருக்கும் போலீஸ் அதிகாரியாகவும், பின்னர் தனது தவறை உணர்ந்து அவர் செய்யும் தியாகம், அவர் மீதான மரியாதை கூடுகிறது. ஆக்ஷன் காட்சிகளில் அனல் பறக்க வைத்திருக்கிறார். ராஷி கண்ணா அழகு தேவதையாக வந்து கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
பார்த்திபன் வில்லத்தனத்திலும், கே.எஸ்.ரவிக்குமார் நேர்மையிலும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்த, எம்.எஸ்.பாஸ்கர், பூஜா தேவரியா, சோனியா அகர்வால், ஆனந்த்ராஜ் அவர்களது கதாபாத்திரங்களை மெருகேற்றியிருக்கின்றனர். யோகி பாபுவின் காமெடி எல்லா படங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கிறது ஏதோ சிரிக்க வைக்கிறார்.
இயக்குனர் தெலுங்கு டெம்பர் படத்தில் உள்ள கிளைமாக்ஸ் பண்ணாமல் இவர் தமிழ் ஆடியன்ஸ் காக ஒரு கிளைமாக்ஸ் மாற்றம் செய்துள்ளார் அந்த கிளைமாக்ஸ் படம் பார்க்கும் மக்களை அனைவரையும் கண் கலங்க வைக்கிறது இந்த படத்தில் ஒரு இயக்குனராக வெற்றி பெற்றிருக்கிறார் வெங்கட் மோகன்
தெலுங்கில் வெளியான டெம்பர் படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கும் இந்த படம், இளம்பெண் ஒருவருக்கு இளைக்கப்படும் கொடுமையால் தனது அயோக்யதனத்தை மாற்றிக் கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் கதையாக உருவாகி இருக்கிறது. தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், சட்டங்கள் அனைத்தும் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. வெங்கட் மோகன் இந்த படத்தின் மூலம் இயக்குநராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். படத்தில் இடம்பெறும் வசனங்கள் மட்டும் மிகைப்படுத்தியிருப்பது போல தோன்றுகிறது.
சாம்.சி.எஸ். இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அருமை. விஐ கார்த்திக்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `அயோக்யா’ குற்றம்