அரண்மனை 3 திரை விமர்சனம். ரேட்டிங் –3.25 /5

நடிகர் நடிகைகள் – ஆர்யா, சுந்தர் சி, விவேக், யோகிபாபு, மனோபாலா, ராஷி கண்ணா, வேல ராமமூர்த்தி, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால், விவேக், சமபத், நளினி, மது சூதன் ராவ், வின்சென்ட் அசோகன், விச்சு விஸ்வநாத், பேபி ஓவி பண்டார்கர், மற்றும் பலர்.

தயாரிப்பு – அவ்னி சினிமாக்ஸ், பென்ஸ் மீடியா.

இயக்கம் –  சுந்தர்.சி.

ஒளிப்பதிவு – UK செந்தில் குமார்.

படத்தொகுப்பு – ஃபென்னி ஆலிவர்.

இசை – .சத்யா சி.

திரைப்படம் வெளியான தேதி – 14 அக்டோபர் 2021

ரேட்டிங் –3.25 /5

இதற்கு முன் வந்த அரண்மனை ஒன்று இரண்டு பாகங்களுக்கும், இந்த மூன்றாம் பாகத்திற்கும் இருக்கும் வித்தியாசம் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டுமேதான்.

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை திரைப்படத்தின் இரண்டாம் பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.

தற்போது அரண்மனை திரைப்படத்தின் 3-ம் பாகம் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் ஹாலிவுட் திரைப்படங்களில் உள்ளது போல் தரமான கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளன.

அது போல பிரம்மாண்டமான அரங்குகளையும் கிராபிக்ஸ் உதவியுடன் மிரட்டலாய் காட்டியிருக்கிறார்கள்.

இதில் சற்று கூடுதலாக கிராபிக்ஸ் காட்சிகளை நேர்த்தியாக கையாண்டு ரசிகர்களை ரசிக்க வைக்கிறார்.

அரண்மனை திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்கள் வரிசையில், நட்சத்திரப் பட்டாளம் மற்றும் திகில் காட்சிகளின் மிரட்டல் என ‘அரண்மனை 3’-யையும் இயக்கியிருக்கும் இயக்குநர் சுந்தர்.சி.

இயக்குனர் சுந்தர் .சியின் வழக்கமான அதே பார்முலா, கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் பயம், கொஞ்சமே கொஞ்சம் காதல் என இந்த அரண்மனை 3 நகர்கிறது.

இயக்குனர் சுந்தர் சி, முந்தைய பாகங்களில் என்ன செய்தாரோ அதையேதான் இந்தப் திரைப்படத்தில் செய்திருக்கிறார்.

அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த மூன்று அரண்மனை திரைப்படங்களையும் வெட்டி, ஒட்டி சேர்த்தாலே அரண்மனை 4, 5, 6…. என உருவாக்கிவிடலாம்.

ஜமீன்தாராக இருக்கும் சம்பத் ராஜ், ஒரு திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைக்க செல்கிறார்.

திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைக்க
சென்ற இடத்தில் ஜமீன்தார் மணப்பெண்ணான ஆண்ட்ரியாவின் அழகில் மயங்கி அவரை திருமணமும் செய்து கொள்கிறார்.

ஜமீன்தாருக்கும ஆண்ட்ரியாவுக்கும்
பெண் குழந்தை ஒன்று பிறக்கிறது.

பெண் குழந்தை பிறந்ததும் ஆண்ட்ரியா இறந்து விடுகிறார்.

அந்த குழந்தை தான் கதாநாயகி ராஷி கன்னா.

ஜமீன்தார் தனது மனைவி ஆண்ட்ரியாவை இழந்ததால் மகள் கதாநாயகி ராஷி கன்னா மீது அதிக பாசம் இல்லாமல் இருக்கிறார் சம்பத்ராஜ்.

கதாநாயகி ராஷி கண்ணா தனது சிறு வயதிலேயே அரண்மனையில் பேய் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்கிறார்.

சிறு வயதிலிருந்தே அந்த அரண்மனையில் பேய் இருப்பதாகக் அனைவரிடமும் கூறி வருகிறார் கதாநாயகி ராஷிகண்ணா.

ஆனால், அவரை வலுக்கட்டாயமாக ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைக்கிறார் ஜமீன்தார் சம்பத்ராஜ்.

சிறு வயதிலேயே ஹாஸ்டலுக்கு சென்ற கதாநாயகி ராஷி கண்ணா பல வருடங்கள் கழித்து தனது அரண்மனைக்கு வருகிறார்.

இதற்கிடையே, அரண்மனையில் எலக்ட்ரிக்கல் வேலை பார்க்க வருகிறார் கதாநாயகன் ஆர்யா.

கதாநாயகி ராஷி கண்ணாவிடம் தனது காதலை சொல்லவேண்டும் என்ற நோக்கத்துடன் கதாநாயகன் ஆர்யா காத்துகொண்டு இருக்கிறார்.

ஒரு நாள் இரவு மீண்டும் அரண்மனையில் பேய் இருப்பதை தெரிந்து கொள்கிறார் கதாநாயகி ராஷி கண்ணா.

தன்னை கொலை செய்ய நினைக்கும் பேயிடம் இருந்து தப்பித்து விடுகிறார்.

ஜமீன்தாரின் உறவுக்காரர் சுந்தர்.சி.யும் வந்து சேர, திரைக்கதை விறுவிறுப்படைகிறது.

அந்த அரண்மனையில் பேய் இருப்பதைப் பற்றி அத்தையின் மருமகனான சுந்தர் சியிடம் கதாநாயகி ராஷி கண்ணா தெரிவிக்கிறார்.

இதை பற்றி விசாரிக்க சுந்தர் சி களத்தில் இறங்குகிறார் .

அரண்மனையில் அமானுஷ்ய சக்தி இருப்பதை அறியும் சுந்தர் சி

அரண்மனையில் இரண்டு பேய்கள் இருப்பதையும் கண்டுபிடிக்கிறார்கள்.

இறுதியில் அந்த இரண்டு பேய்கள் யார்? எதற்கு அரண்மனையில் தங்கி இருக்கின்றன? பேய்களை விரட்டினார்களா? இல்லையா என்பதுதான் இந்த அரண்மனை 3
திரைப்படத்தின் மீதிக் கதை.

திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆர்யா,

முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

திரைப்படத்தின் கதாநாயகன் ஆர்யா என்று சொன்னாலும், மிக முக்கியமான காட்சிகளில் அவர் காணாமல் போவது மிக பெரிய ஏமாற்றம் அளிக்கிறது.

கதாநாயகன் ஆர்யா
மொத்தமாக அவர் பத்து காட்சியில் வந்தாலே அதிகம்.

பத்து வரி வசனமாவது பேசியிருப்பாரா என்பதும் சந்தேகம்தான்

ஆனால், ஆர்யா எங்கே? என்ற கேள்வி படம் பார்ப்பவர்கள் மனதில் தோன்றாத வகையில், மற்ற நட்சத்திரங்கள் படத்தை நகர்த்தி செல்கிறார்கள்

கதாநாயகியாக வரும் ராஷி கன்னா, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிநறார்.

கதாபடத்தின் கதாநாயகி ராஷி கண்ணா.

அவருக்கு இருக்கும் முக்கியத்துவத்தை விட ஆன்ட்ரியாவிற்கு இருக்கும் முக்கியத்துவம் அதிகம்.

கதாநாயகன் ஆர்யாவுக்கும், கதாநாயகி ராஷி கண்ணாவுக்கும் சில காதல் காட்சிகளையாவது வைத்து ரசிகர்களை திருப்தி படுத்தி இருக்கலாம்.

முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் சுந்தர்.சி, தனது வேலையை மிகச்சரியாக செய்திருக்கிறார்.

அவர் பேய் இருப்பதை உணரும் காட்சிகள் மிரட்டல்.

அழகால் கவரும் ஆண்ட்ரியா, பின்னர் பேயாக வந்து மிரட்டவும் செய்கிறார்.

அழகான ஆன்ட்ரியாவை அழகான பேயாகக் காட்டியிருக்கிறார்கள் இயக்குனர் சுந்தர் சி.

ஓ… இதுதான் பேயழகோ.

பழி வாங்கும் உணர்ச்சியில் வரும் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார் ஆன்ட்ரியா.

மறைந்த நடிகர் விவேக் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார்.

இனி இவரை திரையில் பார்க்க முடியாதே என்கிற சோகம் மனதை உறுத்துகிறது.

யோகி பாபு மற்றும் மனோபாலா விவேக்கின் கூட்டணி ரசிகர்களை சிரிக்க வைக்கும் வேலையை மிகச்சரியாக செய்திருக்கிறார்கள்.

இவர்களுடன் இணைந்து , நளினி, மைனா ஆகியோரது கூட்டணி கூடுதலாக சிரிக்க வைக்கிறார்கள்.

சம்பத்ராஜ், வேல ராமமூர்த்தி, மதுசூதன ராவ், சாக்‌ஷி அகர்வால், வின்செண்ட் அசோகன் ஆகியோரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்து மனதில் நிற்கிறார்கள்.

சி சத்யாவின் பின்னணி இசை, பேய்ப் படங்களுக்கு எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது.

யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் அரண்மனை மட்டும் இன்றி திரைப்படத்தின் அனைத்து காட்சிகளும் பிரம்மாண்டமாக இருக்கிறது.

தனக்கே உரிய பாணியில் நடித்தும் அசத்தி இருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.

குறிப்பாக கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது சிறப்பு.

திரைப்படத்திற்கு பெரிய பலம் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியை பிரம்மாண்டமாக உருவாக்கி அமர்க்களம்
ப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி.

திரைப்படத்தில் தேவையற்ற சில பல காட்சிகள் அதிகம் இருக்கின்றன.

அவற்றை வெட்டி எறிந்தால் கூட படத்திற்கு எந்த ஒரு சேதாராமும் இருக்காது.

இரண்டரை மணி நேர திரைப்படத்தை இரண்டு மணி நேரமாகக் குறைத்தால் திரைப்படத்திற்குத்தான் நல்லது.

முந்தைய பாகங்களுடன் ஒப்பிடும் போது மூன்றாம் பாகத்தில் முத்திரை பதிக்கத் தவறிவிட்டார் இயக்குனர் சுந்தர் .சி.

மொத்தத்தில் அரண்மனை 3 ஏற்கனவே பார்த்த அரண்மனை 1,2 படங்களின் சாயலில் தான் உள்ளது.

ஜாலியான பேய்ப் படம் பார்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு மட்டும் இந்தப் படம் ஓகே.

error: Content is protected !!