அரசியலில் எனக்கு ஆர்வம் இல்லை – நடிகை கங்கனா ரனாவத்.
ஈஷா யோகா மையத்தின் காவேரி கூக்குரல் நிகழ்ச்சிக்காக, கோவை வந்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், அங்கு நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘தலைவி’ படத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்தாலும் தனக்கு அரசியல் ஆர்வம் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் தனது வழக்கை ஜெயலலிதாவின் வாழ்க்கையோடு ஒத்து போவதாகவும் அவர் கூறினார்.