அரை மணி நேரம் அழுத பிரபல நடிகை.

ஒரு படத்தின் வெற்றி மட்டுமல்ல ஒவ்வொரு படத்தின் வெற்றியும் திரைப்படக் கலைஞர்களுக்கு முக்கியமானதுதான். ஒரு படத்தின் வெற்றி அவர்கள் வாழ்க்கையை மாற்றிவிடும், ஒரு படத்தின் தோல்வி அவர்கள் வாழ்க்கை புரட்டிப் போட்டுவிடும். அனைவருமே வெற்றிக்காகத்தான் உழைக்கிறார்கள் ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் வெற்றி அவ்வளவு சுலபத்தில் கிடைத்துவிடுவதில்லை.

நட்சத்திரத் தம்பதிகளான நாகசைதன்யா, சமந்தா இருவரும் திருமணத்திற்குப் பிறகு இணைந்து நடித்து வெளிவந்த ‘மஜிலி’ படம் மகத்தான வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்தின் வெற்றி பற்றி வந்த முதல் செய்தியைக் கேட்டதும் அரை மணி நேரம் அழுததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் சமந்தா தெரிவித்துள்ளார்.

மேலும், அதிகாலை 2.30 மணிக்கே எழுந்து ஒன்றைரை மணிநேரம் படத்தின் வெற்றிக்காகவும், கணவருக்காகவும் பிரார்த்தனை செய்தாராம். ‘மஜிலி’ படத்தின் வெற்றி நாகசைதன்யாவுக்கு இந்த நேரத்தில் தேவைப்படும் ஒரு வெற்றியாக அமைந்துள்ளது.

மீண்டும் நாகசைதன்யா, சமந்தா ஜோடி சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். சமந்தா கைவசம் தற்போது தமிழில் ஒரு படங்கள் கூட இல்லை. தெலுங்கில் ‘ஓ பேபி’ என்ற கொரியப் பட ரீமேக்கிலும் ’96’ தமிழ்ப்பட ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.