Tuesday, May 26
Shadow

அவரது வீட்டு மொட்டை மாடியில் வெறித்தனமாக பயிற்சி செய்யும் நடிகர் அருண் விஜய்.

பல நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் எட்டியுள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசும் மாநில அரசும் தீவிரமாக கண்காணித்து முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 19ம் தேதி முதல்
ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வரை தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

நடிகர் அருண் விஜய்க்கு படப்பிடிப்பு இல்லாததால் அவரது வீட்டின் மொட்டை மாடியில் வெறித்தனமாக பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புக்காக சென்ற நடிகர்கள் தங்கள் வீடுகளில் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு அதுதொடர்பான வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் அருண் விஜய்யும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்

அதில் தனது வீட்டு மொட்டை மாடியில் ஸ்டண்ட் பயிற்சி செய்து வருகிறார் அதன் இந்தியாவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் நடிகர் அருண்விஜய்.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு வீட்டிலேயே பார்க்கர் ஸ்டண்ட் பயிற்சி செய்கிறேன்.

ரசிகர்கள் அனைவரும் வீட்டிலேயே இருங்கள் பாதுகாப்பாக இருங்கள் வீட்டில் ஏதாவது உடற்பயிற்சி செய்து உங்களது உடலை பிட்டாக வைத்திருங்கள்.

தேவையில்லாமல் வெளியில் எங்கும் செல்ல வேண்டாம் என்று கூறியிருக்கிறார் நடிகர் அருண் விஜய்