வலிமை திரைப்படத்தில் அஜித்குமாருடன் இணையும் நடிகை நஸ்ரியா & நடிகர் அருண் விஜய்.?
வலிமை படத்திற்காக மீண்டும் நேர்கொண்ட பார்வை பட கூட்டணி இணைகிறது.
அதாவது அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் இணைந்துள்ளனர்.
அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்க பல ஆக்சன் காட்சிகள் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது.
முக்கிய கேரக்டரில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
வில்லனாக நடிக்க அருண் விஜய்யை பரிசீலிக்கிறார்களாம்.
இந்த நிலையில் ‘வலிமை’ படத்தில் நஸ்ரியா நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது தலைமுடியை பாப் கட்டிங் செய்து ஒரு படத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் அதில் வலிமை என்று ஹேஷ்டேக் போட்டுள்ளார்.
எனவே நஸ்ரியா நடிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.











