‘இந்தியன் 2’ திரைப்படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்

இந்தியன் 2’ திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி ஆந்திராவில் ராஜமுந்திரி சுற்றுவட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பல பிரபல நடிகர், நடிகைகள் நடித்து வரும் நிலையில் இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் அனில்கபூர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அனில்கபூர் ஏற்கனவே ஷங்கரின் ‘முதல்வன்’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘நாயக்’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!