நெற்றிக்கண்’ திரைப்படத்தில் இணைந்த ‘வடசென்னை’ பிரபலம்!*
‘இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில், நடிகை நயன்தாரா தற்போது ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடிக்க உள்ளார். இந்நிலையில் ‘வட சென்னை’ படத்தில் நடித்து பிரபலமான சரண் சக்தி இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.











