இந்தியன் 2′ படக்குழுவில் ஒளிப்பதிவாளர் திடீர் மாற்றம்.

உலக நாயகன்  கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெறவுள்ளது. இதனை படமாக்க இயக்குனர் ஆந்திராவில் இடங்களை  தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் திடீரென விலகியுள்ளதாகவும், அவருக்கு பதிலாக ரத்னவேல் பணிபுரியவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.