இந்தியன்  2′ படத்திற்கு இயக்குநர் ஷங்கர் எடுக்கும் புதிய முயற்சி

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென படத்தை தயாரிக்கும் பணியை லைகா நிறுவனம் கைவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ‘இந்தியன் 2’ படம் குறித்த தகவல்கள் அடங்கிய ஒரு புத்தகத்தை ஷங்கர் தயாரித்துள்ளார். இந்த புத்தகத்தில் இந்த படத்தின் கதை, நடிகர்களின் கதாபாத்திரம், படத்தின் காட்சி அமைப்புகள், தேவைப்படும் தொகை என அனைத்து தகவல்களும் உள்ளது. இந்த புத்தகத்தை ரிலையன்ஸ், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ‘இந்தியன் 2’ படத்தின் புதிய தயாரிப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.