இந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்தவர்களுக்கு உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் ருபாய் 1 கோடி நிதியுதவி அளிக்கிறேன்
இந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்தவர்களுக்கு உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் ருபாய் 1 கோடி நிதியுதவி அளிக்கிறேன்
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் ஸ்பாட்டில் கிரேன் அறுந்து விழுந்தத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானர்கள்.
மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இடத்திற்கு அருகிலிருந்த இயக்குனர் ஷங்கர் கதறி கொண்டு தலையில் அடித்துக கொண்டு அழுதார்.
நடிகர் கமல்ஹாசன், லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
மேலும் நடிகர்கள் நடிகை தனுஷ், ஜிவி. பிரகாஷ் குமார் ஆகியோரும் தங்கல் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இறந்த 3 பேருக்கும் அஞ்சலி செலுத்திய பின் கமல்ஹாசன் அவர்கள் பேசியதாவது…
”நான் நூலிழையில் உயிர் பிழைத்தேன். நான்கு நொடிகள் முன்பு வரை நானும் அங்கு தான் இருந்தேன்.
படப்பிடிப்பில் நடந்த இந்த விபத்தை என் குடும்பத்தில் நடந்ததாகக் கருதுகிறேன்.
சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு இல்லாதது அவமானமாகும்.
கடைநிலை ஊழியர்களுக்கும் கூட காப்பீடு இருக்க வேண்டும் என்ற நிலையை எய்த வேண்டும்.
ரூ. 100 கோடி 200 கோடி என்று மார்தட்டுக்கொள்ளும் நம்மால் கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு கூட தர முடியவில்லை.
உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூபாய் ஒரு கோடி நிதியுதவி அளிக்கிறேன்.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.