Friday, July 10
Shadow

இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக.. ரஜினி டிவி.; கமல் டிவி

ஒரு கட்சி தொடங்கினால் கூடவே ஒரு டிவி சேனலையும் தொடங்குவது தான் தற்போதைய டிரெண்ட்.

திமுக கட்சிக்கு சொந்தமாக கலைஞர் டிவி, இசையருவி, கலைஞர் செய்திகள் முதல் ஏகப்பட்ட சேனல்கள் உள்ளன. இவையில்லாமல் சன் டிவியின் பல சேனல்களும் இவர்களது குடும்ப சேனல்கள்தான்.

அதிமுக.வுக்கு ஜெ.நியூஸ் சேனல் உள்ளது. பா.ம. கட்சிக்கு மக்கள் தொலைக்காட்சி உள்ளது. ஐஏகே. கட்சிக்கு வேந்தர் டிவி உள்ளது.

விஜயகாந்துக்கு கேப்டன் டிவி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மெகா டிவி, பிஜேபி.க்கு லோட்டஸ் டிவி உள்ளது.

இந்த நிலையில் விரைவில் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்திருக்கிறார் ரஜினிகாந்த். இவரது பெயரில் இப்போதே ஒரு டிவி சேனல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது கமலும் அவரது மக்கள் நீதி மய்யம் சார்பாக ஒரு புதிய சேனலை தொடங்கவுள்ளாராம்