60 நாளில் ஆங்கிலம் கற்பது எப்படி ? என்பது போல் உள்ளது ரஜினிகாந்தின் திடிர் அறிவிப்பு.? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சீண்டிப் பார்க்கும் சீமான்.
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை நேற்றுதான் உறுதிப்படுத்தினார்.
வரும் புத்தாண்டு 2021 ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும் இந்த ஆண்டில் டிசம்பர் 31-ம் தேதி கட்சி அறிவிப்பு வெளியாகும் எனவும் ட்விட்டரில் அறிவித்தார் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்.
“மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என கூறியிருந்தார்.
அப்போது… “தமிழக மக்கள் நலனுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை.
நான் வென்றால் அது மக்களின் வெற்றி, நான் தோற்றால் அது மக்களின் தோல்வி“ என்றார்.
இதனையடுத்து தமிழக அரசியல் களம் பரபரப்பானது.
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து கடுமையாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மற்றும் அவர் கட்சியை சேர்ந்தவர்கள் டுவிட்டரில் விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு எதிராக சீமானின் நாம் தமிழர் கட்சியினர் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
#தமிழர்_நாட்டை_ தமிழர்_ ஆள்வோம் என ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினி அரசியல் கட்சி குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் இயக்குனரும் நடிகருமான சீமான் அவர்கள் கூறியதாவது…
ரஜினி கட்சியை நிர்வாகிக்க மக்கள் மன்றத்தில் ஒருவர் கூடவா இல்லை ?..
அழுத்தத்தின் காரணமாகதான் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கியுள்ளார்.
ஜனவரியில் கட்சி ஆரம்பித்து ஏப்ரலில் முதல்வர் ஆகிட முடியுமா ?
60 நாளில் ஆங்கிலம் கற்பது எப்படி ? என்பது போல் உள்ளது ரஜினியின் அறிவிப்பு..
எந்த மக்கள் பிரச்சனைக்கு ரஜினி குரல் கொடுத்துள்ளார் ? அவரது தேவை எங்கு உள்ளது ?
இவ்வாறு ‘நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.











