முதன்முறையாக நடிகர் சிம்பு & நடிகை ஸ்ருதிஹாசன் ஜோடியை இணைக்கும் இயக்குநர் மிஷ்கின்.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் சிம்பு கதாநாயகனாக நடிக்க உள்ள புதிய திரைப்படத்தின் கதாநாயகி குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’,  ‘துப்பறிவாளன்’,  ‘சைக்கோ’ உள்ளிட்ட தொடர் வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மிஷ்கின் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘சைக்கோ’ திரைப்படத்தை தொடர்ந்து துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார் முஷ்கின.

லண்டனில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் திரைப்படத்தின் கதாநாயகன் விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சனையால் இயக்குநர் மிஷ்கின் திரைப்படத்திலிருந்து விலகினார்.

துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகர் விஷாலே தயாரித்து நடித்து இயக்க உள்ளார் என கூறப்படுகிறது.

இதனிடையில் இயக்குநர் மிஷ்கின் சொன்ன கதை பிடித்துப் போக நடிகர் சிம்பு உடனடியாக நடிக்க கால்ஷீட் கொடுக்கவும் சம்மதித்துள்ளார்.

பல வருடங்களாகவே இயக்குநர் மிஷ்கின் நடிகர் சிம்பு கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இம்முறை அது நிகழ்ந்துள்ளது.

எனவே விரைவில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ள திரைப்படத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இயக்குநர் மிஷ்கின் இயக்கும் இந்த திரைப்படத்தில் காமெடி வேடத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிப்பார் என கூறப்படுகிறது.

இதில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

error: Content is protected !!