Friday, July 10
Shadow

இந்த டைம் ஒர்க் அவுட் ஆகுமா ? மீண்டும் தனது மகளுக்காக இயக்குனராகிறார் ஆக்சன் கிங் அர்ஜுன்

தென்னிந்திய திரைப்பட உலகில் ஆக்சன் கிங் என்றால் அது அர்ஜுன் அவர்கள் மட்டும்தான்.

திரைப் படத்தில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் திரைப்படங்களைத் தயாரிப்பதிலும் இயக்குவதிலும் ஆர்வம் அவருக்கு அதிகம் உண்டு.

தற்போது சில படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

அண்மையில் வெளியான நடிகர் விஷால் நடித்த இரும்புத்திரை நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது‌‌.

நடிகர் விஷால் நடித்த பட்டத்து யானை திரைப்படத்தில் இவரது மகள் ஐஸ்வர்யாவை அறிமுகப்படுத்தினார் இப்படத்தை இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கியிருந்தார்.

அந்தப் பட்டத்து யானை திரைப்படமும் வெற்றி பெறவில்லை.

அதன் பின்னர் சொல்லிவிடவா என்னும் பெயரில் ஒரு திரைப்படத்தை இயக்கி அதில் தனது மகளை நடிக்க வைத்தார் தமிழ் மற்றும் கன்னடத்தில் இந்த திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படமும் தமிழிலும் கன்னடத்திலும் சரியாக போகவில்லை.

இந்த நிலையில் தனது மகள் ஐஸ்வர்யாவுகாக மீண்டும் இயக்குனர் அவதாரமெடுக்கும் ஆக்சன் கிங் அர்ஜுன் இந்த முறை தெலுங்கு சினிமா செல்கிறார்.

தனது மகளை அங்கு தான் இந்த அறிமுகம் இந்த முறையாவது இவரின் முயற்சி வெல்லட்டும் என வாழ்த்துவோம்.