இயக்குனர்கள் விஜய் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்*

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற தலைப்பில் இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கி வருகிறார். இதே போல் இயக்குனர் கெளதவ் வாசுதேவ்மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் தன்னுடைய அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மனுதராரின் குடும்ப அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்படலாம் என்றும் அச்சம் தெரிவித்த தீபா தரப்பு வழக்கறிஞர், ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா ? என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து நவம்பர் 14ம் தேதிக்குள் பதிலளிக்க இயக்குனர்கள் விஜய் மற்றும் கவுதம் மேனன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை 14ம் தேதிக்கு ⚖நீதிபதி ஒத்தி வைத்தார்.