குருதிப்புனல்’ கதாசிரியர் உடன் இணைகிறார் கவுதம் வாசுதேவ் மேனன் ⁉*
‘உலக நாயகன் கமல்ஹாசன், ஆக்ஷ்ன் கிங் அர்ஜூன், நடிகை கவுதமி நடிப்பில் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘குருதிப்புனல்’. இந்தப் படத்திற்கு கோவிந்த் நிஹாலனி கதை எழுதிருந்தார்.
இந்நிலையில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கவிருக்கும் அடுத்த படம், ‘குருதிப்புனல்’ கதாசிரியர் கோவிந்த் நிஹாலனியின் கதை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கதையில் நடிகை அனுஷ்காவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.











