இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்டோர் மீது தேசத்துரோக வழக்கு : பாரதிராஜா வருத்தம்.
கடந்த ஜூலை மாதம் ‘பசு வதை தடுப்பு’ என்னும் போர்வையில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களான மணி ரத்னம், அபர்னா சென், ராம்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் மணிரத்னம் உட்பட கடிதம் எழுதிய 49 பேர் மீதும் தேசதுரோக வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா திரையுலகினர் 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது வருத்தமளிப்பதாகவும், தேசத்துரோகி, நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.












