உங்கள் நிர்வாண படம் வேண்டும் என்று கேட்டவருக்கு சின்மயி மூக்கறுப்பு
உலகளாவிய மீ டூ பிரசாரத்தின் மூலம் பெண்கள், தங்களுக்கு ஆண்களால் ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாகச் சொல்லத் துவங்கினர். அந்த வகையில், பாடகி சின்மயி பாடல் ஆசிரியர் வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்தார்.
இதையடுத்து, தமிழ் சினிமா பட உலகில் இருக்கும் பலரும் அவருக்கு எதிராக கொடி பிடித்தனர். சிலர் ஆதரவாக இருந்தனர். தனக்கான ஆதரவு; எதிர்ப்பு குறித்தெல்லாம் அவர் துளியும் கவலைப்படாமல், தன்னுடைய வேலையைத் தொடர்ந்தார். உலக அளவில் இப்படி எந்தப் பெண் பாதிக்கப்பட்டதாக வெளியுலகிற்கு சொன்னாலும், அதற்கு ஆதரவாக கரம் உயர்த்தினார் சின்மயி.
பொள்ளாச்சியில், இளம் பெண்கள், வாலிபர்களால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக எழும்பிய பரபரப்பில், பெண்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் குரல் எழுப்பினார் சின்மயி. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தபோதும் அவருக்கு எதிராக போராட துணிந்தார்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் இயங்கும் ஒருவர், சின்மயிக்கு ஒரு போஸ்ட் போட்டார். அதில் உங்களுக்கு பிடித்த உங்கள் நியூட் படத்தை அனுப்பி வையுங்கள் என கூறியிருந்தார். உடனே, பதற்றப்படாத சின்மயி, நியூட் நிறுவனத்தின் அழகு சாதன பொருட்கள் படங்களை பதிவிட்டார். இதுதான் என்னுடைய பேவரைட் நியூட் படங்கள் எனவும் கூறியிருந்தார்.
இது, சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சின்மயியை கோபப்படுத்தும் என நினைத்து பதிவிட்ட அந்த குறும்புப் பதிவர், பதிவை நீக்கி விட்டு மாயமாகி விட்டார்.