கட் அவுட், பேனர்களுக்கு பதிலாக நடிகர் தனுஷ் ரசிகர்கள் செய்த பெரிய காரியம்
‘வடசென்னை’ படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘அசுரன்’. இந்த படத்தில் நடிகர் தனுஷ் ஜோடியாக நடிகை
மஞ்சு வாரியர் நடித்துள்ளார். பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் பசுபதி, கருணாஸ் மகன் கென், இயக்குனர் பாலாஜி சக்திவேல், அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தினை வி கிரியேஷன்ஸ் சார்பில், கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இந்நிலையில், நடிகர் தனுஷ் ரசிகர்கள் திரையரங்குகளில் கட் அவுட், பேனர்களுக்கு பதிலாக திருநங்கைகளுக்கு இலவசமாக தையல் மிஷின் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.