பட்டைய கிளப்பும் பட்டாஸ் பர்ஸ்ட் லுக்; தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்

சத்யஜோதி பிலிம்ஸ், தனுஷ் நாயகனாக நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தை எதிர் நீச்சல், கொடி படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார்.

கொடி படத்தை போல இதிலும் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

சினேகா கதாநாயகியாக நடிக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும் விவேக் மெர்வின் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில், இப்படத்திற்கு ‘பட்டாஸ்’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

தனுஷ் பிறந்தநாளில் இது வெளியானதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

error: Content is protected !!