கலைமாமணி விருதுகளை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
கடந்த 2011ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருது பெறும் கலைஞர்களின் பெயர் பட்டியலை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதில் ஆர்.ராஜசேகர், பாண்டு, குட்டி பத்மினி, பிரசன்னா, நளினி, வேல்முருகன், கார்த்தி, சரவணன், பொன் வண்ணன் உள்பட பலர் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், மூத்த கலைஞர்களுக்கான உதவித்தொகை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறினார்.