திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை 26 அக்டோபர் 2021  திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள்! முதல்வர் ஸ்டாலின்

நேற்று அக்டோபர் 25 டெல்லியில் நடைபெற்ற 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

இந்த தாதா சாகேப் பால்கே
விருதினை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அவர்கள் வழங்கினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விருதை வாங்க விழா மேடைக்கு வந்த பொழுது விழாவில் பங்கேற்ற அனைவருமே எழுந்து நின்று வாழ்த்தினர்.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணையமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

தாதா சாகேப் பால்கே விருது பெற்றுக் கொண்ட பின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் விழாவில் பேசினார்.

“அப்போது குருநாதர் கே பாலசந்தர், அண்ணன் சத்யநாராயணன், நண்பர் ராஜ்பகதூர் ஆகியோரை நினைவு கூர்ந்தார். மேலும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்
பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களை, சக நடிகர்களை, விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தமிழ் மக்கள் இல்லை என்றால் நான் இங்கு இல்லை. என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி. ஜெய்ஹிந்த்.” என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசினார்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தன் ட்விட்டரில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில்…

திரைத்துறையின் உயரிய விருதான #DadasahebPhalkeAward பெறும் அன்பு நண்பர் சூப்பர்ஸ்டார் @rajinikanth (ரஜினிகாந்த்) அவர்களுக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துகள்!

திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள்!

error: Content is protected !!