பெப்சி திரைப்பட தொழிலாளர்களுக்கு முதல் கட்டமாக 1000 குடியிருப்பு : அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அடிக்கல் நாட்டினார்.சென்னையை அடுத்த உள்ள பையனூரில் திரைப்பட நகரம் அமைக்க பெப்சி அமைப்புக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நிலம் வழங்கினார்.முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசு சார்பில் இரண்டாம் கட்டமாக, 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ( பெப்சி ) தமிழ் திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் வழங்கினார்.தமிழக அரசு திரைப்பட நகரம் அமைக்க ஒதுக்கி தந்த இடத்தில் தொழிலாளர்களுக்கு 6 ஆயிரம் வீடுகள் கட்டப்பட இருக்கிறது.

அதன்படி பையனூரில் திரைப்பட தொழிலாளர்களுக்கு முதல் கட்டமாக 1000 குடியிருப்புகள் அமைய உள்ளது..

இந்த பணிக்கு இரண்டு தனியார் கட்டுமான நிறுவனங்கள் முன்வந்துள்ளது.

500 முதல் 2000 சதுர அடிகள் வரை வீடுகள் கட்டப்படுகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில்
அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்த நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

இது தவிர ஸ்டுடியோ கட்ட ஒதுக்கப்பட்ட 15 ஏக்கரில் 20 ஸ்டுடியோ கட்டலாம். முதல்கட்டமாக 2 ஸ்டுடியோக்கள் கட்டப்பட்டு வருகிறது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ. ( பெப்சி ) தமிழ் திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் பொது செயலாளர் அங்கமுத்து சண்முகம் ( பெப்சி ) தமிழ் திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் பொருளாளர் B.N. சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

error: Content is protected !!