கார்த்தி நடிக்கும் கைதி படம் உருவாக இவ்விரண்டு படங்களே காரணம்- இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடி யாரும் கிடையாது. முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் நரேன் நடித்துள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் 25ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்து இயக்குனர் கூறுகையில், “கைதி படத்தில் இடம்பெற்றுள்ள கார்த்தியின் கதாபாத்திரம் கமலின் விருமாண்டி மற்றும் ஹாலிவுட் படமான டை ஹார்ட் ஆகியவற்றை முன்னுதாரணமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரு படங்களுக்கும் டைட்டிலில் கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.