சைக்கோ’ திரைப்படத்தின் டீஸர் குறித்த தகவல்.

.இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படம் ‘சைக்கோ’. இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார், டபுள் மீனிங் புரொடக்சன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் இயக்குநர் ராம், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வருகிற அக்டோபர் 25ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று பட நிறுவனம் அறிவித்துள்ளது. 

error: Content is protected !!