Wednesday, July 15
Shadow

‘கே.ஜி.எப் 2′ திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக படமாக்க காத்திருக்கும் படக்குழுவினர்.

கடந்த 2018 வருடம் எத்தனையோ திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் தமிழக ரசிகர்களின் கவனம் பெற்ற கன்னட திரைப்படம் ‘கே.ஜி.எப்’ .

இயக்குனர் பிரஷாந்த் நீல் என்பவர் இயக்க கன்னட நடிகர் யஷ் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தை தமிழில் நடிகர் விஷால் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் வெளியிட்டார்.

பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் அனைவரின் கவனத்தையும் பெற்றது.

தற்போது இந்த திரைப்படத்தின் 2ஆம் பாகம் தயாரிப்பில் உள்ளது.

இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீனா டண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள இந்த நிலையில் இதன் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதால் இரண்டு சண்டை காட்சிகளை மட்டுமே காட்சி படுத்த வேண்டுமாம்.

அதில் நடிகர் சஞ்சய் தத் நடிக்க வேண்டிய காட்சியும் இடம் பெறவுள்ளது.

வருகிற அக்டோபர் 23-ம் தேதி திரைப்படத்தை வெளியிட படக்குழு தீவிர முயற்சியில் உள்ளார்கள்.