கொரோனா கிருமியிடம் இருந்து நாட்டை காக்கும் நல்லோருக்கு நெஞ்சார்ந்த இயக்குனர் சீனுராமசமி எழுதிய ‘வாழ்த்துப்பா’)

மக்களைக் காக்கும்
மக்களே
வாழ்க என்றும் வாழ்கவே
மக்களைக் காக்கும் மக்களே
வாழ்க என்றும் வாழ்கவே

சுமந்து பெற்றவள்
எங்கள் தாய்
இன்று உயிரை
காப்பவள் செவிலித்தாய்
விண்வெளி உடையணிந்தாய்
விரைந்து பணி செய்தாய்
மக்களை காக்கும்  இவள்
புனிதத் தாய்
வாழ்க என்றும் வாழ்கவே

தன்னையே அர்ப்பணம்
செய்து
மருத்துவம் செய்யும்
மருத்துவரே
நீயும் ஓர் தாய்க்கு
மகனல்லவா
எம் பிள்ளைகள் வணங்கும்
உனையல்லவா..
வாழ்க என்றும் வாழ்கவே
மக்களைக் காக்கும்
மகேசனே

நெருப்பு வெயிலிலே
பொறுப்பாய் நிற்பவரே
முதலில் அன்பாய் சொன்னவரே
அறிந்து வருபவரை
அதிர விரட்டிக் காத்தவரே
வாழ்க என்றும் வாழ்கவே
மக்களைக் காக்கும் காவலரே

ஊரடங்கில் ஊரை
சுத்தம் செய்தவரே
நீல உடையில்
சாக்கடையை சரி செய்தவரே
நீங்கள் தொழிலாளியல்ல
தூய்மைத் தொண்டர்கள்
வாழ்க என்றும் வாழ்கவே
மக்களை காக்கும்
பெருந்தெய்வமே

அன்பும் அறமும்
தாழ்ந்து விடாது இனி
கொரோனா கிருமி
வாழ்ந்து விடாது

                         சீனு ராமசாமி